தமிழ்நாட்டில் இன்று கரோனா வைரஸ் தொற்றால் 2,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,449ஆக அதிகரித்துள்ளது.
மதுரையில் இன்று 58 பேருக்கு கரோனா! - Corona virus
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 58 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
![மதுரையில் இன்று 58 பேருக்கு கரோனா!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:59:19:1592576959-tn-mdu-07-corona-positive-forecast-script-7208110-19062020195711-1906f-1592576831-863.jpg)
மதுரை மருத்துவமனை
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 58 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 550ஆக அதிகரித்துள்ளது.
அதில் 345 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ஏழு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.