தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சிறுமியிடம் தவறாக நடந்தவர் கைது! - Pocso

மதுரை: 10 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 56 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 56 வயது முதியவர் - போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 56 வயது முதியவர் - போக்சோ சட்டத்தில் கைது

By

Published : Jun 16, 2020, 2:15 PM IST

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசடி பகுதியில் வசித்து வருபவர் ஜஹாங்கீர். இவருக்கு வயது 56.

அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் வழக்கம் கொண்ட ஜஹாங்கீர், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது உறவினர் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அழைத்து பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அச்சிறுமி நீண்ட நாள்களாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பக்கத்து வீட்டிற்கு வந்த 56 வயது முதியவரான ஜஹாங்கீர் சிறுமியை அடிக்கடி யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையிர் ஜஹாங்கீர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

10 வயது சிறுமியை 56 வயது முதியவர் மாதக்கணக்கில் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: துக்க வீட்டுக்கு ஒரே லாரியில் பயணம்: காவல் துறையினர் அபராதம்

ABOUT THE AUTHOR

...view details