கரோனா தொற்றின் மிகத் தீவிரம் காரணமாக மதுரை மாவட்டம் முழுவதுமே பீதியில் இருந்த நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று (ஜூலை11) ஒரே நாளில் 553 பேர் கரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மதுரையில் மட்டும் இன்றைய தேதி வரை ஐந்து ஆயிரத்து 757 பேர் கரோனா தொற்றின் காரணமாக, மதுரை அரசு இராஜாஜி பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தற்போது மட்டும் மூன்று ஆயிரத்து 843 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் ஆயிரத்து 803 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை சிகிச்சைப் பலனின்றி 111 பேர் உயிரிழந்துள்ளனர்.