தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் 50 பவுன் திருட்டு - Trichy district news

திருச்சி அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை திருடிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் 50 பவுன் திருட்டு
பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் 50 பவுன் திருட்டு

By

Published : Jun 9, 2020, 10:39 PM IST

திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோவில் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். ஒய்வு பெற்ற மின்வாரியத் துறை அலுவலர்.

இவர் தற்போது மண்ணச்சநல்லூர் பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரும், இவரது மனைவி பத்மா, மகன் ராஜேந்திரன் ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு வீட்டின் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறை பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் படுக்கை அறை ஜன்னல் கிரில் கேட்டை உடைத்து பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை முருகேசன் கண்விழித்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நம்பர் ஒன் டோல்கேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து படுக்கை அறையில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details