சராசரியாக முதுகில் தொடர்ந்து ஏற்படும் வலி நீண்டநேரம் அமர்ந்தே இருப்பதன் விளைவாக ஏற்படுகிறது. இயந்திர கதியான நவீன வாழ்க்கையில் ஒரு நாளின் பெரும்பகுதியை மடிக்கணினி திரையின் முன் உட்கார்ந்தோ அல்லது கைப்பேசிகளின் வழியே இணைய உலகத்தில் தேடுதல் வேட்டையிலோ நாம் செலவிடுகிறோம். இத்தகைய பணிச்சூழல் நம் கைகளிலும் முழங்கைகளிலும் அதிகமான வேலை அழுத்தத்தை அளிக்கிறது. இவை முதுகு வலி ஏற்பட வழிவகுக்கிறது.
நீங்கள் கடினமான பணிகளை மேற்கொண்டாலும் சரி அல்லது எளிய வேலையைச் செய்தாலும் சரி முதுகு வலி என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் முதுகுவலி தோன்றலாம்.
தொடர்ந்து அதனால் பாதிக்கப்படுபவர்கள் அதற்குண்டான சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால், சிறிதாக இருக்கும் முதுகு வலி நாள்பட கடும் முதுகு வலி அல்லது தண்டுவட பிரச்னைகளில் கொண்டு சேர்க்கும்.
காரணங்கள் எதுவாக இருந்தாலும், உங்கள் வலியைத் திரும்பப் பெற இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
முதுகு வலியோடு போராடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு அதிலிருந்து விடுபட ஐந்து வழிகளை சொல்கிறோம் இதோ...
சிகிச்சையாளரைத் தேர்ந்தெடுங்கள்
நீங்கள் 4-6 வாரங்களுக்கு மேல் முதுகுவலியை சந்தித்தால் உடனடியாக நல்ல உடல் பயிற்சி நிபுணரை சந்தியுங்கள். உங்கள் உடல் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க, அதன் இயல்பான இயக்கத்தை உறுதி செய்ய தேவையான நுட்பங்களை உங்களுக்கு அவர் எடுத்துரைப்பார்.
யோகா பயிற்சி
உள மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, யோகா பயிற்சி குறுகிய காலத்தில் முதுகுவலியை நீக்குகிறது என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. யோகா உங்கள் முழு உடலையும் அத்துடன் சேர்த்து உங்கள் மனதையும் வலுப்படுத்துகின்ற மென்மையான, கட்டுப்படுத்தப்பட்ட இயக்கங்களை உள்ளடக்கிய ஓர் உடல்நல வாழ்வியலை போதிக்கிறது.
இது முதுகுவலி மற்றும் முதுகில் ஏற்படும் பிரச்னைகளை வெகுவாகக் குறைக்கிறது. முதுகுவலியை குறைப்பதற்கான பயனுள்ள உடற்பயிற்சியில் ஒன்று மர்ஜரியாசனா (பூனை போன்ற தோற்றம்). அதனை நீங்கள் முதல்கட்டமாக செய்ய முயலுங்கள்