திருப்பத்தூர் அடுத்த தாயப்பான் நகர் பகுதியில் வசித்துவரும் சண்முகம். இவரது மனைவி வீட்டின் உள்ளே சாமிக்கு கர்ப்பூர தீபம் காண்பித்து வீட்டிற்கு வெளியே வந்து கற்பூர தீபம் கட்டும்பொழுது திடீரென்று 5 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் வீட்டிற்கு முன்பு வாசலில் நிற்பதை கண்டு அதிர்ந்து போனார். உடனே சண்முகம் திருப்பத்தூர் வனத்துறைக்கு தகவல் அளித்தார்.
வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர்: வீட்டிற்குள் 5 அடி நீளம் கொண்ட ராஜ நாகப் பாம்பு புகுந்ததால் வீட்டில் உள்ளவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளம் கொண்ட ராஜ நாகம்
தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 5 அடி நீளம் கொண்ட ராஜ நாக பாம்பை பிடித்து மாம்பாக்கம் காப்பு காட்டில் விட்டனர். குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜநாகத்தால் சிறிது நேரம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.