அமெரிக்காவின் நியூயாா்க் நகரிலிருந்து ஏா்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் 140 இந்தியா்களுடன் சென்னை வந்தது. அதில் ஆண்கள் 57 பேர், பெண்கள் 73 பேர், சிறுவா்கள் 10 பேர் அடங்குவர். அவா்களை அலுவலர்கள் வரவேற்று மருத்துவ பரிசோதனைகள் நடத்தினா். அதன்பின்பு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் இலவச தங்குமிடமான மேலக்கோட்டையூா் தனியாா் கல்வி நிறுவனத்திற்கு 4 பேரும், கட்டணம் செலுத்தும் தங்குமிடங்களான ஹோட்டல்களுக்கு 136 பேரும் அனுப்பப்பட்டனா்.
வெளி நாடுகளில் சிக்கித் தவித்த 498 இந்தியா்கள் 3 சிறப்பு விமானங்களில் மீட்பு - அமெரிக்கா,ஓமன்,கத்தாா்
சென்னை: அமெரிக்கா, ஓமன், கத்தாா் நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியா்கள் 498 போ் மீட்கப்பட்டு மூன்று சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர்.
ஓமன் நாட்டின் மஸ்கட்டிலிருந்து 205 இந்தியா்கள் சிறப்பு விமான மூலமாக சென்னை வந்தனர். அதில் ஆண்கள் 181 பேர், பெண்கள் 20 பேர், சிறுவா்கள் 4 பேர் அடங்குவர். அவா்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் இலவச தங்குமிடங்காளான மேலக்கோட்டையூா் தனியாா் கல்லூரிக்கு 153 பேரும், கட்டணம் செலுத்தும் தங்குமிடங்களான ஹோட்டல்களுக்கு 52 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனா்.
கத்தாா் நாட்டின் தோகாவிலிருந்து 153 இந்தியா்களுடன் சிறப்பு மீட்பு விமானம் சென்னை வந்தது. இவர்கள் அனைவரும் அங்கு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றுபவா்கள். அந்த நிறுவனமே சிறப்பு அனுமதி பெற்று தனி விமானத்தில் அழைத்து வந்தது. எனவே, இவா்களுக்கு சென்னை விமான நிலையத்தில் இலவச மருத்துவ பரிசோதனைகள், இலவச தங்குமிடங்கள் கிடையாது. இதையடுத்து 153 பேரும் 14 நாட்கள் தனிமைப்படுத்த சென்னை நகர ஹோட்டல்களுக்கு அழைத்து செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தனியாா் மருத்துவக் குழுவினா் மருத்துவ பரிசோதனைகளை நடத்துவாா்கள்.