தமிழ்நாட்டில், இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 688ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 28) ஒரேநாளில் 486 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 806ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூரில் 486 பேருக்கு கரோனா உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 12,806ஆக உயர்வு! - Collector MaheshWari Ravikumar
திருவள்ளூர்: இன்று ஓரே நாளில் 486 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 806ஆக உயர்ந்துள்ளது.
486 People Corona Confirm In Thiruvallur
அதேபோல், 8 ஆயிரத்து 411 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 4 ஆயிரத்து 173 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:கரோனாவால் பாதிக்கப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!