தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சென்னை வந்தடைந்த வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 473 இந்தியர்கள்! - சென்னை விமான நிலையம்

சென்னை: வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியா்கள் 473 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

473 Indians from abroad arrived at the Chennai airport
வெளிநாட்டில் இருந்த இந்தியர்களை மீட்க சிறப்பு விமானம்

By

Published : Jul 30, 2020, 4:25 AM IST

நேற்று மாலை (ஜூலை 28) ஓமன் நாட்டின் மஸ்கட் நகரிலிருந்த 163 இந்தியர்கள், நள்ளிரவு பிலிப்பைன்சிலிருந்து 143 இந்தியர்கள், அதிகாலை அபுதாபியிலிருந்து 167 இந்தியர்கள் என 473 பேர் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

அனைவரையும் அரசு அலுவலர்கள் மலர் கொத்து அளித்து வரவேற்றனர். பின்னர், அவர்களைத் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைத்தனர். 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின் தொற்று இல்லை என்று உறுதியானவர்கள் மட்டும் இம்மையங்களிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள்.

ABOUT THE AUTHOR

...view details