தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 25, 2020, 9:28 PM IST

ETV Bharat / briefs

இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழை - குளிர்ந்த ராமநாதபுரம்!

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 43.7 மிமீ மழை பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை - குளிர்ந்த இராமநாதபுரம்!
விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை - குளிர்ந்த இராமநாதபுரம்!

தமிழ்நாட்டில், கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரத்தில் நேற்று (ஜூன் 24) காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை இன்று (ஜூன் 25) அதிகாலை வரை நீடித்தது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ராமநாதபுரத்தில் நேற்றிலிருந்து இன்று அதிகாலை வரை மொத்தமாக 43.7 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.

குறிப்பாக, ராமநாதபுரம் 23 மிமீ, கடலாடி 72.20 மிமீ, மண்டபம் 32 மிமீ, பாம்பன் 37.7 மிமீ, கமுதி 62.20 மிமீ, பரமக்குடி 13.20 மிமீ, ராமேஸ்வரம் 62 மிமீ, ஆர்.எஸ் மங்கலம் 90 மீமி என மழை அளவை பதிவு செய்துள்ளன.

மாவட்டத்தில் இந்த ஆண்டு பதிவாகி மழை பொழிவில் இதுவே அதிகபட்சமான அளவை கொண்டிருக்கிறது. இனி தென்மேற்கு பருவ மழையின் போது ராமநாதபுரம் மாவட்டத்தில் நல்ல மழை பொழிவை எதிர்பார்க்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மழை நீரால் சூழ்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் இரவு முழுவதும் அவதியுற்றதாக அறிய முடிகிறது.

ABOUT THE AUTHOR

...view details