ஈரான் நாட்டுக்கு மீன்பிடிக்க சென்ற 727 மீனவர்கள், கரோனா ஊரடங்கு காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் தவித்துவந்தனர்.
இவர்கள் கடந்த மாதம் (ஜூன்) 26ஆம் தேதி, கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு அழைத்துவரப்பட்டனர்.
மீதமுள்ள 40 பேர் ஈரானில் தவித்து வந்தனர். அவர்கள் விமானம் முலம் டெல்லி வழியாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்களில் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் 24 பேர் ஆவார்கள். மீதமுள்ளவர்கள் திருநெல்வேலி (2), தூத்துக்குடி (2), நாகப்பட்டினம் (4), கடலூர் (4), செங்கல்பட்டு (01), ராமநாதபுரம் (01) ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
இவர்கள் 40 பேரும் மருந்து பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பினார்கள். மீனவர் சங்கங்கள் மூலமாக மத்திய- மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டதால் ஈரானில் இருந்து தாயகம் திரும்பினோம் என தாயகம் திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகள் மக்களிடையே பீதியை கிளப்பக் கூடாது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்