நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச்சென்ற கோமல் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானது.
இதனால், காவல் நிலையத்தில் பணியிலிருந்த ஐந்து காவல் துறையினர், ஆறு ஊர்க்காவல் படையினர் மயிலாடுதுறையிலுள்ள திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.