தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நாகையில் கரோனா பாதிப்பு: 4 மருத்துவர்கள், ஒரு செவிலிக்கு தொற்று உறுதி! - நாகை கரோனா

நாகப்பட்டினம்: நான்கு மருத்துவர்களுக்கும், ஒரு செவிலிக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மாவட்டத்தின் தொற்று எண்ணிக்கை 250ஆக உயர்ந்துள்ளது.

நாகை கரோனா
நாகை கரோனா

By

Published : Jun 29, 2020, 12:46 AM IST

கரோனா நோய்க் கிருமித்தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று(ஜூன் 28) நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் 16 நபர்களுக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த இரண்டு மருத்துவர்கள், ஒரு செவிலி, 2 தனியார் மருத்துவர்கள் என ஐந்து பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் 234ஆக இருந்த தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 250ஆக உயர்ந்துள்ளது. கரோனா நோய்க்கிருமித் தொற்று உறுதியானவர்களை நாகை அரசு மருத்துவமனையின் கரோனா சிறப்புப்பிரிவில் சேர்த்து, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details