திருவள்ளூர்:பூந்தமல்லி திருமழிசை அடுத்த கூடப்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அவருடைய நண்பர் சசிகுமார் வீட்டின் அருகே அவருடன் பப்ஜி கேம் விளையாடி உள்ளார்.
அப்போது அஜித் குமார், சசிகுமார் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அஜித் குமார் தனது சகோதரர்களை வரவழைத்து சசிகுமாரை கத்தியால் குத்தியுள்ளார்.