தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனா பாதிப்பு: திருவண்ணாமலையில் 3912ஆக அதிகரிப்பு - கரோனா எண்ணிக்கை

திருவண்ணாமலை: மூன்று வயதுக்குள்பட்ட இரண்டு குழந்தைகள் உள்பட நேற்று ஒரே நாளில் மட்டும் 135 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3912 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்பு: திருவண்ணாமலையில் 3912 ஆகா உயர்வு!
Thiruvannamalai new corona cases

By

Published : Jul 20, 2020, 1:18 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,777 ஆக இருந்தது. மேலும் நேற்று புதிதாக 135 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து912 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து087 ஆக உள்ளது. இதுவரை சிகிச்சைப் பலனின்றி 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையிலிருந்து வந்த 3 பேர், பெங்களூரிலிருந்து வந்த 8 பேர், கும்பகோணத்தில் இருந்து வந்த ஒருவர் , நோயாளியுடன் தொடர்பில் இருந்த 51 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 11 பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 40 பேர், முன் களப்பணியாளர் ஒருவர், மற்ற மாவட்டங்களிலிருந்து அனுப்பப்பட்ட 20 பேர் உள்ளிட்ட 69 பேருக்கு நேற்று மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாவல்பாக்கம், வந்தவாசி, காட்டாம்பூண்டி, தண்டராம்பட்டு, பொன்னூர், கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், ஆக்கூர், ஆரணி, போளூர், பெருங்காட்டூர், எஸ்வி நகரம், திருவண்ணாமலை நகராட்சி உள்ளிட்ட சுகாதார வட்டத்தைச் சேர்ந்த 69 பேருக்கு நேற்று தொற்று பாதிக்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

144 தடை உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள நிலையில் உள்ளூரில் உள்ளவர்கள் முழு ஊரடங்கு சரியான முறையில் கடைபிடிக்காததால், கரோனா நோயாளிகளிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்று பரவும் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவது.

இதனால், பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 3 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உட்பட நேற்று ஒரே நாளில் மட்டும் 135 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details