திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 10) ஒரே நாளில் 3 வயது குழந்தை உள்பட 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,233ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூரில் 37 பேருக்கு கரோனா: 5 பேர் உயிரிழப்பு! - Tiruppur Corona Deaths
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மூன்று வயது குழந்தை உள்பட 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்தனர்.

37 Corona Positive cases In Tiruppur
அதேசமயம், இன்று ஒரே நாளில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 377 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், வீட்டு கண்காணிப்பில் 4 ஆயிரத்து 314 பேர் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 560 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இன்று ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து பேர் கரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.