தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனா பாதிப்பு: விருதுநகரில் இன்று ஒரே நாளில் 363 பேருக்கு கரோனா உறுதி! - 363 பேருக்கு கரோனா எண்ணிக்கை

விருதுநகர்: இரண்டு மருத்துவர்கள் உள்பட ஒரே நாளில் 363 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு: விருதுநகரில் இன்று ஒரே நாளில் 363 பேருக்கு கரோனா உறுதி!
Corona cases in virudhunagar

By

Published : Jul 22, 2020, 8:37 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே 3ஆயிரத்து 924 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இன்று இரண்டு மருத்துவர்கள் உள்பட மேலும் 363 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக இதுவரை 4ஆயிரத்து 287 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 2ஆயிரத்து 181 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 2ஆயிரத்து 72 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இத்தொற்றின் காரணமாக இன்று மட்டும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 34 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details