தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஒரே நாளில் சி.ஆர்.பி.எஃப் போலீசார் 30 பேருக்கு கரோனா! - ஒரேநாளில் 30 போலீசாருக்கு கரோனா

திருவள்ளூர்: பூந்தமல்லியில் ஒரே நாளில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 30 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் சி.ஆர்.பி.எஃப் போலீசார் 30 பேருக்கு கரோனா
ஒரே நாளில் சி.ஆர்.பி.எஃப் போலீசார் 30 பேருக்கு கரோனா

By

Published : Jul 18, 2020, 10:37 PM IST

பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு படை காவல் 77-ஆவது பட்டாலியன் பிரிவில் பணியாற்றிய சிஆர்பிஎஃப் வீரர்கள் 30 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கரோனா பாதிக்கப்பட்டவர்களை ஆவடியில் உள்ள ரிசர்வ் காவலர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மத்திய ரிசர்வ் படை காவலர்கள் 30 பேருக்கு ஒரே நாளில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இங்கு பணிபுரிபவர்கள் அடிக்கடி ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் படை காவல் தலைமை அலுவலகத்திற்கு சென்று வருவது வழக்கம். எனவே அங்கு உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 8 கோடி மக்களுக்கு 8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்க முடிவு : பாஸ்வான்

ABOUT THE AUTHOR

...view details