தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

3 பேட்டரியில் இயங்கும் மருந்து தெளிப்பான் வாகன சேவைகள் தொடக்கம்! - நடமாடும் உணவகம்

சென்னை: ரூ.13.07 லட்சம் மதிப்பிலான 3 பேட்டரியில் இயங்கும் மருந்து தெளிப்பான் வாகனங்களின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

CM Edapadi Palanisamy
CM Edapadi Palanisamy

By

Published : Jul 24, 2020, 6:07 PM IST

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு பணிகளுக்காக, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் வி.எஸ்.எல் தொழில் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.13.07 லட்சம் மதிப்பிலான 3 பேட்டரியில் இயங்கும் மருந்து தெளிப்பான் வாகனங்களுடன் ஒரு "நடமாடும் உணவகம்" வாகன சேவையையும் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

கரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கப்பட்ட 3 பேட்டரியில் இயங்கும் மருந்து தெளிப்பான் வாகனங்கள் சேலத்திற்கும், "நடமாடும் உணவகம்" வாகனம் சென்னையில் தனது சேவையை வழங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:பாலம் புதுப்பிக்கும் பணி - எம்எல்ஏ ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details