கரோனா தொற்றால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை சென்னையில் தொடந்து அதிகரித்து வருகிறது. நேற்று(ஜூலை 9) இரவு முதல் இன்று (ஜூலை 10) காலை வரை, 25 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் ஒன்றரை வயது குழந்தையும் உயிரிழந்துள்ளது.
கரோனாவால் ஒரே இரவில் சென்னையில் 25 பேர் உயிரிழப்பு! - Corona death
சென்னை: கரோனா தொற்று காரணமாக நேற்று (ஜூலை 9) இரவிலிருந்து இன்று காலை வரை, சிகிச்சைப் பலனின்றி 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
25 people died by corona overnight in Chennai
கரோனா தொற்று சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் எட்டு பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நான்கு பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்று பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மூன்று பேரும், கே.எம்.சி. மருத்துவமனையில் மூன்று பேரும், தனியார் மருத்துவமனையில் நான்கு பேரும் என மொத்தம் 25 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.