விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே ஏழு ஆயிரத்து 258 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ள நிலையில் இன்று (ஜூலை30) மேலும் 244 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழு ஆயிரத்து 502 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நான்கு ஆயிரத்து769 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.