திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை அடுத்த வேலாம்பட்டி பகுதியில் விழா ஒன்றில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக தனிப்படை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாறுவேடத்தில் அந்தப் பகுதிக்குச் சென்ற காவல் துறையினர் குடோனுக்குள் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அவர்களைச் சுற்றிவளைத்த காவல் துறையினர் அனைவரையும் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து சின்னாளபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
திண்டுக்கல்லில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் கைது - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்: சின்னாளபட்டி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 24 பேரை கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து 13 இருசக்கர வாகனங்கள், 42,000 ரூபாய் பணத்தைப் பறிமுதல்செய்தனர்.
திண்டுக்கல்லில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 24பேர் கைது
பின்னர், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சின்னாளபட்டி, செம்பட்டி, ராமநாதபுரம், வெள்ளோடு, செட்டியபட்டி, வக்கப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர், மேலும் அவர்களிடமிருந்து 13 இருசக்கர வாகனங்கள், 42,000 ரூபாய் பணத்தைப் பறிமுதல்செய்தனர்.