தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ரூ.2,000 கோடி பங்குகளின் பிணையப் பத்திரங்கள் ஏலம்- தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: மொத்தம் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வடிவிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவுள்ளதாக நிதித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2000 crore auction
2000 crore auction

By

Published : Jun 20, 2020, 11:07 PM IST

இதுகுறித்து நிதித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “1,000 கோடி ரூபாய் மதிப்பிலான 9 ஆண்டு பிணையப் பத்திரம், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான 30 ஆண்டு பிணையப் பத்திரம் என மொத்தம் 2,000 கோடி ரூபாய் பங்குகள் வடிவிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால் மும்பையிலுள்ள கோட்டை அலுவலகத்தில் ஜூன் 23ஆம் தேதி அன்று நடத்தப்படும். அதேசமயம் போட்டி ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் நடைபெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details