திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈஞ்சூர்மேடு பகுதியில் உள்ள தைலம் தோப்பிற்குள் எரி சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மதுவிலக்கு பிரிவு உதவி அய்வாளர் புகழேந்தி, நாகராஜ், தனசாமி ஆகியோர் அடங்கிய குழு சம்பவ இடத்தில் தீவிர தேடுதல் மேற்கொண்டது.
200 லிட்டர் எரி சாராயம் காவல் துறையிடம் சிக்கியது
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈஞ்சூர்மேடு கிராமத்தில் 200 லிட்டர் எரி சாராய ஊறல் காவல் துறையிடம் சிக்கியது.
200 litre alcohol trapped in Thiruvallur
அப்போது, தைலம்தோப்பின் ஒரு பகுதியில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் எரி சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அதே இடத்தில் அந்த ஊறல் அழிக்கப்பட்டது. சட்டவிரோதமாக எரி சாராயம் காய்ச்சிய ஈஞ்சூர்மேடு கிராமத்தைச் சேர்ந்த தலைமறைவான முருகன் என்பவர் மீது கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சாராயம் காய்ச்சியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.