சென்னை புழல் அடுத்த புத்தகரத்தைச் சேர்ந்தவர் ஷார்ட்ராஜ். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரீட்டா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை! - Jewl Theft In Thiruvallur
திருவள்ளூர்: தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்நிலையில், ஷார்ட்ராஜ் தனது வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனையில் உள்ள மனைவியை பார்த்த பின் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள், ரூ. 35 ஆயிரம் ரொக்கம் கொள்ளைபோனது தெரியவந்தது.
இது குறித்து புழல் காவல் நிலையத்தில் ஷார்ட்ராஜ் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக புழல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.