ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. திருவாடானை காவல் நிலையத்தில் ஒரு சார்பு ஆய்வாளர் உள்பட இருவருக்கும், தீயணைப்புப் படையினர் இருவருக்கும், வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் இருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
திருவாடானை எஸ்ஐக்கு கரோனோ பாதிப்பு! - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்
ராமநாதபுரம்: திருவாடானையில் எஸ்ஐ ஒருவருக்கும் காவலர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டது.
திருவாடானையில் காவலர் 2 பேர் கரோனோ வைரஸ் தொற்ற உறுதி
தொடர்ந்து அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. திருவாடானை காவல் நிலையம் மூடப்பட்டு, அங்கு செல்லும் வழியும் தடைசெய்யப்பட்டுள்ளது.