தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நக்சல்களுக்கு உதவிய பாஜக தலைவர் கைது! - நக்சலைட்டுகளுக்கு உதவிய பாஜக தலைவர்

ராய்பூர் : நக்சல்களுக்கு டிராக்டர் வழங்கியதாக உள்ளூர் பாஜக தலைவர் ஜகத் பூஜாரி உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, டான்டேவாடா காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவ் தெரிவித்தார்.

நக்சல்களுக்கு  உதவிய பாஜக தலைவர் கைது
நக்சல்களுக்கு உதவிய பாஜக தலைவர் கைது

By

Published : Jun 14, 2020, 9:42 PM IST

இது தொடர்பாக டான்டேவாடா காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவ் கூறுகையில், "சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் அமைப்பினர் தீவிரமாக இயங்கிவருவதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. இன்னும் குறிப்பாக டான்டேவாடா மாவட்டத்தில் அந்த அமைப்பினருக்கு தொடர் உதவிகளை சிலர் ரகசியமாக செய்துவருவதாக அரசின் புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தினர்.

உள்ளூர் பாஜக தலைவரான ஜகத் பூஜாரி சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் நக்சல்கள் போராளிகளை சந்தித்து, அவர்களுக்கு உதவிகளை செய்கிறார் என்பதை நாங்கள் தகவல் கொடுத்தவர்கள் மூலம் தெரிந்துகொண்டோம். சில நாள்களுக்கு முன்பு, நக்சல் அமைப்பினர் சிலர் ஜகத்தின் உதவியுடன் ஒரு டிராக்டரை வாங்குவதை தகவலறிந்தவர்களிடமிருந்து தெரிந்துகொண்டோம்.

அவர் நக்சல்களுக்கு தேவையான உதவிகளை கடந்த 10 ஆண்டுகளாக செய்துவருகிறார். இது தொடர்பாக மேலதிக விசாரணை நடந்து வருகிறது. இந்த கும்பலைச் சேர்ந்தவர்களை விரைவில் கைது செய்வோம்” என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details