தமிழ்நாட்டில் மேலும் 6 ஆயிரத்து 993 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஒரே நாளில் 5 ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளனர்; 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சியில் இன்று புதியதாக 188 பேருக்கு கரோனா உறுதி! - Tamilnadu corona Cases
திருச்சி: இன்று ஒரே நாளில் 188 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Today Corona Positive 188 Cases in Trichy
திருச்சியில் நேற்று (ஜூலை 26) வரை 1,197 பேர் கரோனா சிகிச்சை பெற்று வந்தனர். இன்று ஒரே நாளில் 73 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 234ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததால், கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது. தற்போது திருச்சியில் 1,311 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனா வைரஸ்க்கு மூலிகை மருந்து: சித்த மருத்துவ கழக செயலர் பதிலளிக்க உத்தரவு