கரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. இதனால் வெளிநாட்டு, உள்நாட்டு விமான சேவை, ரயில், பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாட்டில் தங்கியிருந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பங்களாதேஷ், பிரான்ஸ் உள்பட பல நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சொந்த நாட்டிற்கு சிறப்பு விமானங்கள் மூலமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதேபோல், வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மத்திய அரசு கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் தவிப்பவர்களை அழைத்து வர 'வந்தே பாரத்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.