ஜூலை 1ஆம் தேதி முதல் இம்மாதம் 14 ஆம் தேதி வரை வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு 16 ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு மீட்பு விமானங்களை இயக்குகிறது.
அதில் 10 விமானங்கள் சென்னைக்கும், ஆறு விமானங்கள் திருச்சிக்கும் இயக்கப்படுகின்றன. திருச்சிக்கு இயக்கப்படும் 6 விமானங்களில் ஒரு விமானம் கோவை வழியாக திருச்சிக்கு செல்கிறது.
துபாயிலிருந்து சென்னைக்கு 4 விமானங்கள், பக்ரையினிலிருந்து சென்னைக்கு 3 விமானங்கள், அபுதாபியிலிருந்து 1, சிங்கப்பூரிலிருந்து 1, மலேசியாவிலிருந்து ஹைதராபாத் வழியாக 1 வீதம் மொத்தம் 10 விமானங்கள் சென்னை வருகின்றன.
திருச்சிக்கு சிங்கப்பூரிலிருந்து 4 விமானங்கள், அதில் ஒரு விமானம் கோவை வழியாக திருச்சிக்கு வரும். மேலும் மலேசியாவிலிருந்து திருச்சிக்கு 2 விமானங்கள் மொத்தம் 6 விமானங்கள் திருச்சிக்கு இயக்கப்படுகின்றன.
இந்த 16 மீட்பு விமானங்களில் அழைத்துவரப்படும் இந்தியா்களில் பெரும்பாலோனோா் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் என்றும், ஒவ்வொரு மீட்பு விமானத்திலும் சுமாா் 160லிருந்து 180 போ் வரை வருவாா்கள் என்றும் கூறப்படுகிறது.
சென்னை சா்வதேச விமானநிலையம் வந்து சேரும் 10 விமானங்களில் வரும் பயணிகள் அனைவருக்கும் சென்னை விமானநிலையத்திலேயே மருத்துவ பரிசோதனைகள் நடக்கும். அதன்பின்பு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவாா்கள்.
கட்டணம் செலுத்தி விடுதியில் தங்கமுடியாதாவா்களுக்காக, அரசே இலவச தங்குமிடங்கள் ஏற்பாடு செய்துள்ளது.
காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகங்கள் தனியாா் கல்வி நிறுவனங்களில் அந்த ஏற்பாடுகளை செய்து தயாராக வைத்துள்ளன. 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் முடிந்ததும் அவரவா் ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்படுவாா்கள் என்று விமானநிலைய அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அதன்படி விமானங்கள் வந்து சேரும் இடங்கள் மற்றும் நேரத்தை காணலாம்.
துபாய்- சென்னை விமானங்கள்
01/07/20 மாலை 5.20 மணி