விருதுநகர் மாவட்டத்தில், கரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே 11 ஆயிரத்து 107 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று (ஆக.16) மேலும் 76 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
விருதுநகரில் கரோனாவால் 157 பேர் உயிரிழப்பு - Virudhunagar Corona Deaths
விருதுநகர்: கரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து பேர் இன்று (ஆக.16) உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது.
![விருதுநகரில் கரோனாவால் 157 பேர் உயிரிழப்பு 157 dead by corona in Virudhunagar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:57:09:1597588029-tn-vnr-03-corona-attack-vis-script-7204885-16082020184806-1608f-1597583886-691.jpg)
157 dead by corona in Virudhunagar
இதன் காரணமாக, பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 183 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 10 ஆயிரத்து 63 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள 963 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஐந்து பேர் உயிரிழந்தனர். தற்போது வரை 157 பேர் உயிரிழந்துள்ளனர்.