உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெட்ரோல் டீசல் விலை உயர்வது போல் உயர்ந்து வருகிறது.
கடலூரில் 143 பேருக்கு கரோனா தொற்று உறுதி! - கரோனா தொற்று
கடலூர்: இன்று ஒரே நாளில் 143 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

143 new corona cases in cuddalore
இதற்கிடையில், கடலூர் மாவட்டத்தில் நேற்றுவரை கரோனாவால் இரண்டு ஆயிரத்து 521 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று (ஜூலை28) மட்டும் 143 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்து 664 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 1636 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 26 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.