தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட13  பேருக்கு கரோனா! - திருவாரூரில் இன்று 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி

திருவாரூர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உள்பட 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3-பேர் உட்பட13-பேருக்கு தொற்று உறுதி
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3-பேர் உட்பட13-பேருக்கு தொற்று உறுதி

By

Published : Jun 20, 2020, 12:35 PM IST

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பலர் சொந்த ஊர் திரும்பிய நிலையில் அவர்களை சுகாதாரத்துறை ஊழியர்கள் பரிசோதனை செய்துவருகின்றனர். இதில் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னையிலிருந்து கீழையூருக்கு திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகள் ஆகிய மூன்று பேருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று வலங்கைமான் பகுதியை சேர்ந்த 69 வயது பெண் தனது உறவினர் வீட்டிற்கு சென்று வந்த நிலையில் அவருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சென்னையிலுள்ள உறவினர் வீட்டு பிறந்தநாள் நிகழ்ச்சி சென்று வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்ணிற்கும் பவித்திரமாணிக்கத்தை சேர்ந்த 48 வயது பெண்ணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனா பாதிப்பாளர்கள் புதிதாக 13 பேர் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 191-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 83-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 108 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு அடைப்பு - மயிலாடுதுறை வணிகர் சங்கம்

ABOUT THE AUTHOR

...view details