இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "12 ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வில் அரியர் தேர்வினை எழுதி மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலை இன்று (ஆகஸ்ட் 18) முதல் www.dge.tn.gov.in என்கிற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
12ஆம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்! - Usha Rani, Director, State Examinations
சென்னை: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11ஆம் வகுப்பில் மறு தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கான விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
![12ஆம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்! Usha Rani, Director, State Examinations](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12th-1708newsroom-1597659238-899.jpg)
விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பின்பு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி, மாணவர்கள் தேர்வுத்துறையின் www.tn.dge.gov.in என்கிற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பின்னர், ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் அலுவலகத்தில் மாணவர்கள் சமர்பிக்க வேண்டும்.
மறு மதிப்பீட்டிற்கு அனைத்து பாடங்களுக்கும் 505 ரூபாயும், மறுகூட்டலுக்கு உயிரியியல் பாடத்திற்கு மட்டும் 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.