தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 10 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை! - கரோனா பரிசோதனை

சென்னை: இதுவரை 15 மண்டலங்களில் நடைபெற்ற முகாம்களில் 10 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

10lakhs People's Corona Tested in Chennai
10lakhs People's Corona Tested in Chennai

By

Published : Jul 14, 2020, 7:47 PM IST

சென்னையில் கரோனா தொற்று ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், அண்ணா நகர் போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது.

இருப்பினும் குணமடைந்தவரின் விழுக்காடும் அதற்கு சரி சமமாக உள்ளது. இந்த தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.

நேற்று (ஜூலை13) 503 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக அண்ணாநகரில் 54 அடுத்தபடியாக திருவிக நகரில் 49 மருத்துவ முகாம்களும் தேனாம்பேட்டையில் 45 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற 503 மருத்துவ முகாம்களில் மொத்தம் 28 ஆயிரத்து 368 பேருக்கு பரிசோதிக்கப்பட்டன.

அதில், 2142 பேர்கள் அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். மீதமுள்ளவர்களுக்கு நோய்க்கு ஏற்ற மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

மே 8 ஆம் தேதி முதல் இன்று வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 16 ஆயிரத்து 609 மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளன. அதில் 10 லட்சத்து 37 ஆயிரத்து 173 பேருக்கு பரிசோதிக்கப்பட்டதில் 12 ஆயிரத்து 107 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாடு மேய்க்கச் சென்ற இளம்பெண் பாலியல் வல்லுறவு செய்து கொலை!

ABOUT THE AUTHOR

...view details