தமிழ்நாட்டில் இன்று 3,680 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 261ஆக அதிகரித்துள்ளது.
திருச்சியில் இன்று புதிதாக 109 பேருக்கு கரோனா! - கரோனா வைரஸ்
திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 109 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மருத்துவமனை
இதற்கிடையில் திருச்சி மாவட்டத்தில் இன்று 109 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் 6 பேர் வெளியூரிலிருந்து வந்தவர்கள் .
இதன்மூலம் அம்மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,273ஆக அதிகரித்துள்ளது. இதில் 825 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.