திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்து கோவில் கரிகுட்டி காலனி பகுதியில் காவிரி மற்றும் வினோத் ஆகியோர் அவரது வீட்டில் 10 வயது சிறுமியை வைத்து கள்ளச்சாராய வியாபாரம் செய்து வருகின்றனர்.
வாணியம்பாடியில் 10 வயது சிறுமியை வைத்து கள்ளச்சாராய விற்பனை! - 10 years old girl sales spirit
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே 10 வயது சிறுமியை வைத்து கள்ளச்சாராய விற்பனை செய்வது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மேலும், இவர்கள் பொரிகாரன் வட்டம், சஞ்சிவநூர் ஆகிய பகுதிகளிலும் கள்ளசாராய வியாபாரத்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் பொறுப்பேற்ற நாள் முதல் மாவட்டத்தில் விற்கப்படும் கள்ளச்சாராயம், கஞ்சா, ரேஷன் அரிசி கடத்தல் என சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அவ்வப்போது சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்கள் ஒரே நோக்கத்தில் பணியாற்றினால் சமூக விரோத செயல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று தன்னார்வலர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.