தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / breaking-news

கோரிக்கைகளை ஏற்காவிட்டால் எதிர் பிரச்சாரம் - அய்யாக்கண்ணு - விவசாயிகள்

Breaking News

By

Published : Feb 9, 2019, 5:31 PM IST

2019-02-09 16:02:08

திருச்சி: விவசாயிகள் வாழ்நாள் முழுவதும் கடன்காரர்களாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு விரும்புவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. 
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விவசாய விளைபொருட்கள் லாபகரமான விலை வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இதை ஏற்க மறுக்கும் கட்சிகளை எதிர்த்து விவசாயிகள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள்.

 மத்திய பட்ஜெட்டிலும், மாநில பட்ஜெட்டிலும் விவசாயிகளுக்கு எந்த விதமான அறிவிப்புகளும் இல்லை. விவசாயிகள் வாழ்நாள் முழுவதும் கடன்காரர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 10,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கேரளா, கர்நாடகாவில் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுத்து தமிழகத்திற்கு திருப்பி விட வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்தப்படும்.

அதேபோல் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஆலைகள் ரூ 400 கோடி வரை நிலுவை வைத்துள்ளது. இந்த தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 25 ஆம் தேதிக்கு மேல் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தப்படும். மார்ச் 28, 29ம் தேதிகளில் டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும்", என்றார்.

ABOUT THE AUTHOR

...view details