தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / breaking-news

திமுக எம்எல்ஏக்களைத் தொடர்ந்து தாக்கும் கரோனா! - DMK mla affected by Corona

விழுப்புரம் : செஞ்சி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஜி.மஸ்தானுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 திமுக எம்எல்ஏக்களை துரத்தும் கரோனா!
திமுக எம்எல்ஏக்களை துரத்தும் கரோனா!

By

Published : Jun 28, 2020, 4:27 PM IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி திமுக சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்து வருபவர் கே.ஜி.மஸ்தான். இவர் நேற்று, செஞ்சி அருகேயுள்ள ஓட்டம்பட்டு பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளார். தொடர்ந்து அவருக்கு அங்கிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று வெளியான பரிசோதனை முடிவில் மஸ்தானுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கரோனாவால் பாதிக்கப்படும் திமுகவைச் சேர்ந்த நான்காவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details