கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் பன்னாட்டு விமான சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்டுக் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
வெளிநாட்டிலிருந்து விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுவருகின்றனர். அவர்களைத் தனிமைப்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்த காவவர் ஒருவருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.