தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இனி கரோனாவிற்கு தடுப்பூசி தேவையில்லை

இந்தியாவில் ஊசியில்லா கரோனா தடுப்பு மருந்து அக்டோபர் முதல் கிடைக்கும் என்று மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜைடஸ் கெடில்லா தெரிவித்துள்ளது.

ஜைகோவ்-டி
ஜைகோவ்-டி

By

Published : Sep 13, 2021, 3:50 PM IST

டெல்லி: இந்தியாவின் புகழ்பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜைடஸ் கெடிலா, ஊசியில்லா கரோனா தடுப்பு மருந்தான ஜைகோவ்-டி தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தை அவசரகாலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஆகஸ்டு 20ஆம் தேதி அனுமதி அளித்தது.

இந்த தடுப்பூசி மொத்தம் மூன்று டோஸ்களை கொண்டுள்ளது. இதனை 28, 56 நாள்கள் இடைவெளியில் செலுத்துக்கொள்ள வேண்டும். 12 வயது முதல் 18 வரை உள்ளோர் செலுத்திக்கொள்ளலாம்.

இதுகுறித்து ஜைடஸ் கெடில்லா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஷர்வில் படேல், "ஜைகோவ்-டி தடுப்பு மருந்து வினியோகம் இந்த மாதம் தொடங்கப்படும். பொதுமக்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து தடுப்பூசி கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.

ஜைகோவ்-டி தடுப்பு மருந்து பிளாஸ்மிட் டிஎன்ஏ கொண்ட மருந்தாகும். பிளாஸ்மிட் டிஎன்ஏ மருந்தை ஜைடஸ் கெடிலா நிறுவனம் மட்டுமே தாயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - சென்னையில் 1.85 லட்சம் பேர் பயன்

ABOUT THE AUTHOR

...view details