சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி (ZyCoV-D) தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்துவதற்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளதாக உயிரி தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று தவணைகளாகச் செலுத்தப்படும் இந்தத் தடுப்பூசி டிஎன்ஏவை (DNA) சார்ந்து தயாரிக்கப்படும் முதல் தடுப்பூசியாகும். இது SARS-CoV-2 வைரசின் புரதத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.