இந்தியாவில் கோவாக்ஸின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் என மூன்று கோவிட்-19 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. அத்துடன் பல்வேறு தடுப்பூசி நிறுவனங்கள் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.
இந்நிலையில், அகமதாபாத்தைச் சேர்ந்த சைடஸ் காடில்லா நிறுவனத் தடுப்பூசிக்கு இந்த வாரத்தில் ஒப்புதல் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று டோஸ் கொண்ட இந்தத் தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளன.
50க்கும் மேற்பட்ட மையங்களில் பரிசோதனை செய்துவரும் இந்நிறுவனம், ஆண்டுக்கு 10-12 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
மனித பயன்பாட்டிற்கு முதன்முதலாக பிளாஸ்மிட் டி.என்.ஏ. முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி சைடஸ் காடில்லாதான் என தெரிவித்துள்ள நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷர்வில் பட்டேல், இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என ஆய்வில் நிருபணமாகியுள்ளது என்றார்.
இதையும் படிங்க:127ஆவது சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவு: 15 எதிர்க்கட்சிகள் முடிவு