டெல்லி :ஆன்லைன் உணவு விநியோக தளமான சொமேட்டோவின் நிறுவனர் மற்றும் சிஇஒ தீபிந்தர் கோயல், நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கு நன்கொடை அளிப்பதற்கு ESOP என்கிற பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தில் இருந்து சுமார் 90 மில்லியன் அமெரிக்க டாலர்களை (கிட்டத்தட்ட ரூ. 700 கோடி) சொமேட்டோ ஃபியூச்சர் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளார்.
இது குறித்து அவர் ஊழியர்களிடம் கூறியதாவது , "கடந்த மாதத்தின் சராசரி பங்கு விலையில், இந்த ESOPகள் மதிப்பு (சுமார்) USD 90 மில்லியன் (சுமார் ரூ. 700 கோடி)" என்றும் இந்த ESOPகளில் இருந்து வரும் வருமானம் அனைத்தையும் சொமேட்டோ ஃபியூச்சர் ஃபவுண்டேஷனுக்கு (ZFF) நன்கொடையாக வழங்குகிறேன்.
ஊழியர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தில் வேலை செய்யும்போது அவருடைய குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.50,000 வரை தொகை கிடைக்கும். மேலும் அவர் நிறுவனத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் பட்சத்தில் ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சமாக இந்த தொகை உயரும் என்றும் கூறியுள்ளார். பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் ஒரு பெண் 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பை முடித்தால் அவருக்கு 'பரிசுத் தொகை' அறிமுகப்படுத்தப்படும்" என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் "வேலையில் இருக்கும்போது நடக்கும் விபத்துகள் போன்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளை" சந்திக்கும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சேவை காலத்தைப் பொருட்படுத்தாமல் குடும்பங்களுக்கு கல்வி மற்றும் வாழ்வாதார ஆதரவு வழங்கப்படும், என்றார்.
இதையும் படிங்க: சீதக்காதி பகுதி 1: “இயக்குநர் ருத்ரய்யா”