ஹைதராபாத்: உணவு வகைகளை ஆன்லைனில் டெலிவரி செய்யும் நிறுவனங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் சொமேட்டோ நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி தீபேந்தர் கோயல், நண்பர்கள் தின கொண்டாட்டத்தை வித்தியாசமாகவும், அதுவும் புதுமையான முறையில் கொண்டாடி உள்ளார்.
அந்த வித்தியாசம் யாதெனில், தனது நிறுவனத்தின் டி சர்ட்டை அணிந்து கொண்டு, ராயல் என்பீல்ட் பைக்கில், தனது வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்து உள்ளார். இந்த போட்டோக்களை, அவர், தனது ட்விட்டர் சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்து உள்ளார். இந்த போட்டோக்கள், தற்போது நெட்டிசன்களால், சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
சொமேட்டோ நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி தீபேந்தர் கோயல், தனது நிறுவன டி சர்ட்டில், வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை டெலிவரி செய்தது மட்டுமல்லாது, டெலிவரி பார்ட்னர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டோர்களுக்கு நண்பர்கள் தினத்தை ஒட்டி, அதுகுறித்த வாசகங்கள் இடம்பெற்று இருக்கும் ரப்பர் பிரேஸ்லெட் வழங்கி அவர்களை மகிழ்வித்தார்.