சென்னை :இஸ்ரேல் - ஆசியா இடையிலான வர்த்தக கூட்டமைப்புடன், பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் போட்டு உள்ளதாக சோகோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இஸ்ரேல் - ஆசியா நாடுகளுக்கு இடையே வணிகம் மற்றும் வர்த்தக போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில் இஸ்ரேல் - ஆசியா சேம்பர் ஆப் காமர்ஸ் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அமைப்புடன் வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு உள்ளதாக சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சோகோ தெரிவித்து உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இஸ்ரேல்-ஆசியா சேம்பர் ஆப் காமர்ஸ் உடன் கூட்டணியில் உள்ள நிறுவனங்களுக்கு 55-க்கும் மேற்பட்ட கிளவுட் அடிப்படையிலான வணிக ஆப் சேவைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம் துபாயில் உள்ள இஸ்ரேலின் துணைத் தூதரகத்தில் வைத்து கையெழுத்தானதாக சோசோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதன் மூலம் இஸ்ரேல் - ஆசியா சேம்பர் ஆப் காமர்சுடன் கூட்டணியில் உள்ள நிறுவனங்களுக்கு வணிக மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க உதவியாக இருக்கும் என சோகோ நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பேசிய சோகோ மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்திய மேலாளர் பிரேமானந்த் வேலுமணி, "துபாயில் உள்ள இஸ்ரேல் நாட்டின் துணைத் தூதரகம் மற்றும் இஸ்ரேல்-ஆசியா வர்த்தக சம்மேளனத்துடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.