கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பிலிருந்து இந்தியா மெல்ல மீண்டுவரும் நிலையில், கேரளாவில் 15 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் சுகாதாரத்துறை ஊழியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் ஜிகா வைரஸ் பரவல் காணப்படுகிறது.
முன்னதாக பராசாலா பகுதியைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணிக்கு ஜிகா வைரஸ் தொற்று முதன்முதலாக உறுதி செய்யப்பட்டது. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். பாதிக்கப்பட்டவர்களின் பரிசோதனை மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸின் அறிகுறிகள் என்ன?