கோவிட்-19 இரண்டாம் அலையின் பாதிப்பிலிருந்து இந்தியா மெல்ல மீண்டுவரும் நிலையில், கேரள மாநிலத்தில் சிகா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 24 வயது கர்ப்பிணிக்கு சிகா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இவரது பரிசோதனை மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மேலும் 13 பேருக்கு சிகா பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.