ஹைதராபாத்: மகாராஷ்டிரா மாநிலத்தின் கோங்கன் பகுதியில் வசித்து வந்தவர், ஜாகிர் அப்துல் கரீம் நாயக். அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, இந்த ஜாகிர் நாயக் குடும்பத்துடன் மும்பையில் உள்ள டோங்கிரிக்கு குடிபெயர்ந்தார். இவரது குடும்பம் ஒரு மருத்துவ குடும்பம். எனவே, ஜாகிர் நாயக்கும் மருத்துவராக தன்னை உயர்த்திக் கொண்டு, மருத்துவத் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். இந்த நிலையில், இஸ்லாமிய மதபோதகரின் சந்திப்பு ஜாகிர் நாயக்குக்கு கிடைக்கிறது.
இந்த சந்திப்பில், இஸ்லாம் மதபோதகரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட ஜாகிர் நாயக், தன்னுடைய மருத்துவத் தொழிலை கைவிட்டார். இதனையடுத்து தானும் இஸ்லாமிய மதபோதனைகளை வழங்கத் தொடங்குகிறார். இதனால் மும்பை நகரம் முழுவதும் மதபோதனைகளை வழங்கினார், ஜாகிர் நாயக். இவ்வாறு மெல்ல மெல்ல மக்களைச் சென்றடைந்த ஜாகிர் நாயக்கை, மக்களும் பின்பற்றத் தொடங்கினர்.
மேலும் பல்வேறு இடங்களில் மதபோதனைகளை வழங்க ஜாகிர் நாயக்கை மக்கள் அழைத்தனர். இதன் காரணமாக, இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்றை 1991ஆம் ஆண்டு தொடங்கினார். அது மட்டுமல்லாமல் ‘பீஸ் டிவி’ (Peace TV) என்ற சேட்டிலைட் சேனலையும் ஜாகிர் நாயக் தொடங்கினார். இவரை 1 கோடியே 70 லட்சம் மக்கள் சமூக வலைதளங்களில் பின் தொடர்கிறார்கள். எனவே, இவர் தனது உரையை, நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிகழ்த்துகிறார்.