ஆந்திரப் பிரதேசம்:ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம் ஏப்ரல், மே மாதங்களில் அடுத்தடுத்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சிகள் தங்களது வியூகத்தை வகுத்து வருகின்றன.
இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான அம்பதி ராயுடு, 10 நாட்களில் கட்சியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இருந்து விலகிய அம்பதி ராயுடு, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கர்னூல் எம்பியும், முதன்மை உறுப்பினருமான சஞ்சீவ் குமார், ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார். பொது மருத்துவரும், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணருமான சஞ்சீவ் குமார், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், கட்சி பொறுப்பாளர்களை மாற்றும் நடவடிக்கையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ராஜினாமா செய்யும் முடிவு குறித்து அறிவித்த சஞ்சீவ் குமார், “கட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மரியாதை இல்லை. என்னிடம் எம்பி பதவி மட்டும்தான் உள்ளது, தன்னிடம் வரும் மக்களின் குறைகளைத் தீர்க்கும் அதிகாரம் இல்லை. பின்தங்கிய மாவட்டமான கர்னூல் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான தனது கனவு திட்டங்களில் கட்சி கவனம் செலுத்தவில்லை.